வடக்கில் மீண்டும் கொரோனா அச்சம்! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு – மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வட பகுதிக்கு வருபவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளிற்கு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

கடற்கரையை அண்டிய பகுதியில் இலங்கை கடற்படையினரால் விசேட ரோந்து , கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதனடிப்படையில் அண்மையில் தொண்டமானாறுப் பகுதியில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வந்திறங்கிய 08 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால் இன்னும் எத்தனை பேர் இவ்வாறு சட்டவிரோதமாக வருகை தந்துள்ளார்கள் என்பது தொடர்பில் ஒரு கேள்வி உள்ளது.

இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநராலும் எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பில் கடற்படையினரின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கின்றது மாவட்ட ரீதியில் நேரடியான தொடர்புகளை பேணி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply