திருமணத்தால் விலகிய விஜய் சேதுபதியின் பட நாயகி… அந்த இடத்தை பிடித்த வேறு ஒரு கதாநாயகி.

இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுவாதி என்பவர் இயக்கும் முதல் படத்தில் கதாநாயகனாக நடிப்பவர் அசோக் செல்வன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்று ஒரு திரைப்படத்தில் நடித்த நிஹாரிகா ஆகும்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டிருந்த வேலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதன் காரணமாக இதன் படப்பிடிப்புகள் தடைப்பட்டன. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் நிஹாரிகாவிற்கு டிசம்பர் மாதம் திருமணம் என்பதால் அவர் இந்த திரைப்படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவரது இடத்தில் மேகா ஆகாஷ் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தின் கதை களம் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாக உள்ளது என சுவாதி தெரிவித்துள்ளார். ஒரு புகைப்பட கலைஞருக்கும் நடன கலைஞருக்கும் இடையே நிலவும் காதல் அதனை நகைச்சுவை கலந்த ஒரு கதைக் களம் நிறைந்த திரைப்படம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் அக்டோபர் மாதம் 27ஆம் திகதி இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாகவும் இந்த திரைப் படத்தின் கதாநாயகனான அசோக் செல்வன் மற்றும் கதாநாயகி மேகா இருவருக்குமிடையிலான காட்சிகள் சிறப்பாக வரும் என நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply