இந்த வருடம் பட்டப்படிப்பை நிறைவு செய்து வெளியேறிய பட்டதாரிகளுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

நாடளாவிய ரீதியில் 50ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. நியமனங்கள் வழங்கப்பட்ட பட்டதாரிகள் கடந்த 2ஆம் திகதி சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கலைத்துறையில் விசேட மற்றும் பொதுத்துறைப் பட்டப்படிப்பை முடித்து வெளியேறியவர்கள் இந்த வேலைவாய்ப்பில் உள்வாங்கப்படவில்லை.

அதன் காரணமாக யாழ் பல்கலை மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் இன்றைய தினம் காலை 9 மணியளவில் ஜனாதிபதியின் இணைப்பு செயலாளரை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, 50ஆயிரம் பட்டதாரிகள் உள்வாங்கல் செயற்பாட்டில் 2019 ஆம் ஆண்டுக்குள் வெளியேறிய மாணவர்களையே தற்போது சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும், 2020 ஆண்டு வெளியேறியவர்களுக்கான நியமனங்கள் அடுத்த கட்டமாக சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் இணைப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2020 ஆம் ஆண்டு வெளியேறிய பட்டதாரிகள் அடுத்த கட்ட சேவையில் முதலாவதாக இணைத்துக் கொள்ளப்படுவதோடு, இது தொடர்பில் உடனடியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேரடியாக கலந்துரையாடுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply