நாடாளுமன்றிற்கு கறுப்புப்பட்டியுடன் சென்ற எதிர்க்கட்சி!

ஸ்ரீலங்கா நாடளுமன்ற அமர்வு இன்று 1 மணிக்கு ஆரம்பமபகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுப்பு பட்டியுடன் சென்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.

நாடாளுமன்ற அமர்வுகளில் மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகர கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் அவரை சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

அத்துடன் மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகர இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் மேற்கொண்டிருந்தார். இதன் போதும் எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இருப்பினும் நீதிமன்றத்தால் சத்தியப் பிரமாணம் செய்ய அனுமதிக்கப்பட்டார் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரித்தார்.

Be the first to comment

Leave a Reply