தூக்கில் தொங்கிய 81வயது முதியவர்

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் 81 வயது முதியவர் ஒருவர் துக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலத்தை இன்று செவ்வாய்க்கிழமை காலையில் அவரது வீட்டிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை இரவு முதியவரின் உறவினர்கள் வீட்டில் இல்லாத நிலையில், தனிமையில் இருந்த இவர் வீட்டின் அறையின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த கொண்டுள்ளார்.

ஏறாவூர் சித்தாண்டி பிரதான வீதியைச் சேர்ந்த பிள்ளையான் விஸ்வநாதன் (81 வயது) என்ற முதியவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply