தமிழ் நடிகர் இயக்கிய திரைப்படத்திற்கு கனடாவில் கௌரவம்

தீரன் அதிகாரம் ஒன்று, தேவராட்டம் உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் போஸ் வெங்கட் முதன் முறையாக இயக்கிய திரைப்படம் கன்னிமாடம். ஆவண கொலை குறித்த இந்த திரைப்படம் ஊரடங்கு பிறப்பிக்கும் முன்னரே வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு பல திரை பிரபலங்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த திரைப்படம் கனடாவிலுள்ள டோரென்டோவில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கனடாவின் தலைநகரம் டொரெண்டோவில் செப்டம்பர் 11 முதல் 13 வரை சர்வதேச தமிழ் திரைப்பட விழா நடைபெறவுள்ளது என்பதும் இதில் தமிழ் நடிகர் போஸ் வெங்கட் இயக்கிய முதல் படமே கலந்துகொள்ளவுள்ளது என்பது பெருமைக்குரியது.

Be the first to comment

Leave a Reply