விறுவிறுப்பான போட்டி

வருடாவருடம் நடைபெறும் பாவலன் ஞாபாகார்த்த வெற்றிக்கிண்ணம் இந்த வருடம் புளூஸ்-ஹாட்லியைற்ஸ் வசமானது.

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவனும் கல்லூரி காலத்திலிருந்து கிரிக்கெட் வீரனுமாக திகழ்ந்த பாவலன், 2015ம் ஆண்டு, மைதானத்தில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தவேளை எதிர்பாராத விபத்தில் உயிரிழந்தார். அந்த மிக சிறந்த கிரிக்கெட் வீரனை நினைவுகூர்ந்து வருடாவருடம் நடைபெறும் மென்பந்து சுற்றுப்போட்டி இந்த வருடமும் ஐக்கிய இராச்சிய ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக (Hartleyites Sports Club UK) ஏற்பாட்டில் The Old Tifin மைதானத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

தற்கால கோவிட் 19 சூழ்நிலைகளால் கழக வீரர்கள் மற்றும் விருந்தினர்கள் வருகையோடு கொவிட் 19க்குரிய கட்டுப்பாடுகளுடன், மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பாவலன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண போட்டியில் நிறைவில் புளூஸ் ஹாட்லியைற்ஸ் (Blue Hartleyites)அணியை எதிர்த்து யெலோஸ் ஹாட்லியைற்ற்ஸ் (Yellows Hartleyites) அணி ஆடியது.

Be the first to comment

Leave a Reply