போதை பொருள் இல்லாமல் விருந்தே இல்லை!!! விஷால் திரைப்பட நடிகை அதிர்ச்சி தகவல்…

ஹிந்தி திரைப்பட நடிகை கங்கனா தொடங்கிய போதைப் பொருள் பற்றிய கருத்து தற்போது கன்னட திரையுலகையை பதைபதைக்க வைத்தது. இந்த வழக்கில் ஏற்கனவே தொலைக்காட்சி நடிகை அனிகா மற்றும் திரைப்பட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இவர்களிடம் இருந்து கிடைத்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் விஷால் நடித்த ஆம்பள என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மாதவி லேகா என்பவர் கூறியதன் படி கன்னட திரையுலகில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகிலும் போதைப்பொருள் பழக்கம் அதிகமாக உள்ளது.

போதை மாத்திரைகள் இல்லாத சினிமா விருந்துகளே கிடையாது என அவர் அளித்துள்ள தகவல்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல நடிக நடிகையர்கள் இந்த போதைப்பொருள் வழக்கில் இருந்து தப்பித்து உள்ளதாகவும் அவர்கள் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தப்பித்து இருப்பதாகவும் இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள் வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர் இதுகுறித்த விசாரணையை மீண்டும் தொடங்குமாறு குறிப்பிட்டிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply