சல்லிக் காசுக்கும் மதிக்கமாட்டார்கள்!

சிறிய அணிகளில் உண்மையான முகம் அவர்கள் 20வது திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவையும் எதிர்ப்பை வெளியிடும் வாக்கெடுப்பின் போதே தெரியவரும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த சிறிய அரசியல் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைய விரும்புவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அந்த செய்தி நாடு முழுவதும் பகிரங்கமாகியுள்ளது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் தற்போது பல்வேறு கதைகளை பரப்பி வந்தாலும் நாட்டு மக்கள் எதிர்க்கட்சியினரின் கதைகளை சல்லி காசுக்கும் கவனத்தில் கொள்ள மாட்டார்கள்.

கடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் அரசியல் மேடைகளில் செயற்பட்ட விதம் தொடர்பாக கவனத்தில் கொள்ளாத மக்கள் தற்போதும் அதே நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply