சைபீரியாவில் திடீரென தோன்றும் அதிசய பள்ளங்கள்.

ரஷிய நாட்டின் சைபீரியாவிலுள்ள உள்ள தந்த்ரா எனும் பகுதியில் 100 அடி ஆழமும் 70 அடி விட்டமும் கொண்ட பிரம்மாண்டமான பள்ளம் தோன்றியுள்ளதால் அப்பிரதேச மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். இந்தப் பகுதியில் மட்டும் இதுவரை 9 பிரம்மாண்ட பள்ளங்கள் தோன்றியுள்ள நிலையில் இதற்கான சரியான காரணத்தை அறிய முடியாமல் குழம்பி வருகின்றனர் விஞ்ஞானிகள்.

2013ஆம் ஆண்டில் வட மேற்கு சைபீரியாவில் யாமல் பெனின்சுலா பகுதியில் 70 அடி ஆழமும் 30 அடி விட்டமும் கொண்ட பிரம்மாண்டமான பள்ளம் ஒன்று திடீர் என தோன்றியது. அந்தப் பள்ளம் தோன்றியதற்கான உறுதியான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் வேற்றுக்கிரகவாசிகள் தரை இறங்கியது இந்த வகையான பழங்கள் உண்டாகி இருக்கலாம் என்றும் நிலத்தடி ராணுவ நடவடிக்கைகள் காரணமாக இந்த பள்ளம் தோன்றியிருக்கலாம் எனவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வந்தன.

சைபீரியாவின் நிலத்தடி பகுதியில் ஏராளமான மீத்தேன் வாயு இருக்கின்றன. காலநிலை மாற்றத்தால் இப்பகுதியில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடியில் இருக்கும் மீத்தேன் வாயு வெப்பம் ஏறி ஒரே இடத்தில் திரண்டு சூடேறி வெடித்து விடுவதால் இப்பகுதியில் உள்ள தரை வலுவிழந்து உள்வாங்கி விடுகிறது.

இதன் காரணமாகத்தான் இந்த அளவு பிரம்மாண்டமான பளிங்கு தோன்றுகிறது என சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கோடாலிக் கருதுகோள்கள் முழுவதுமாக உண்மையான ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் விஞ்ஞானிகள் உண்மையான காரணத்தை கண்டறிய ஆய்வுகளை தொடர்ந்து கொண்டே வருகின்றனர்.

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்பிரதேசத்தில் அடுத்தடுத்து 9 பிரம்மாண்ட பள்ளங்கள் தோன்றின. இதற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்காக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திடீர் பள்ளங்கள் தோன்றுவதற்கு காலநிலை மாற்றங்கள் கூட காரணமாக இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

Be the first to comment

Leave a Reply