சரியான நேரம் வந்துவிட்டது – சந்திரிகா எச்சரிக்கை

அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவு வைபவத்தில் கலந்துக்கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுத்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களிடம் தெரிவித்திருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இதுகுறித்த விடயங்களை தனது முகநூல் பக்கத்திலேயே தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சியின் மாநாடுகளுக்கு மாத்திரமல்ல, மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு பல வருடங்களாக எனக்கு அழைப்புகள் கிடைக்கவில்லை.

அப்படி அழைப்பு கிடைத்திருந்தால், எனது அன்புக்குரிய தந்தை உருவாக்கிய, தாய் பாதுகாத்த, நான் பிறந்து வளர்ந்த, நான் நாட்டுக்கு சேவையாற்ற வழியை ஏற்படுத்திக்கொடுத்த கட்சிக்காக நான் அவற்றில் கலந்துக்கொள்ளாமல் இருந்திருப்பேன் என நினைக்கின்றீர்களா?.

அப்படியான அழைப்புகள் கிடைத்திருந்தால், அவற்றை ஏகமனதாக ஏற்றுக்கொண்டிருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply