கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி -சூடு பறக்கவுள்ள முதல் ஆட்டம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் 13 ஆவது ஐ பி எல் போட்டிகளுக்கான அட்டவணை இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

செப்ரெம்பர் 19 ஆம் திகதி அபுதாபியில் ஆரம்பமாகவுள்ள இத் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

19 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் முதல் போட்டியைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி துபாயில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

திங்களன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது நடைபெறும்.

அதன் பின்னர் செப்ரெம்பர் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான நான்காவது போட்டி ஷார்ஜாவில் ஆரம்பமாகும்.

மொத்தமாக துபாயில் 24, அபுதாபியில் 20, ஷார்ஜாவில் 12 போட்டிகள் நடைபெறவுள்ளன

Be the first to comment

Leave a Reply