விபத்தில் சிக்கி சுயநினைவில்லாமல் இருக்கும் பெண்ணொருவரை அடையாளம் காண உதவுங்கள்!

04/07/2018 அன்று (புதன்கிழமை) கொம்பனித்தெரு, ரொஹான் ஃபாமஸி சமிக்ஞை விளக்கு மஞ்சல் கடவையினை கடக்கும்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரினால் மோதுண்டு இப்பெண் விபத்துக்குள்ளாகியிருக்கிறார்.

படத்திலுள்ள பெண் தற்போது சுயநினைவின்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்துப் பிரிவினூடாக (73ம் வார்ட்) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தப்பெண் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவரென்று போக்குவரத்து பொலிஸ் மூலம் எனக்கு தகவல் அறிவிக்கப்பட்டது.

இவரை தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து தகவலை இவரின் குடும்பத்தார்களுக்கு சென்றடைய இயலுமானவரை இவ் அஞ்சலை பகிர்ந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நமக்கும்..தாய் உண்டு சகோதரிகள்
உண்டு கடமை உண்டு அல்லவா ?
அதேபோல் உங்களுக்கும் உண்டு

Be the first to comment

Leave a Reply