ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசிய பெண் அரசியல் பிரமுகர்….

வரும் நவம்பர் மாதம் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியல் களத்தில் பிரவேசிக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அரசியல் அட்சய தொடங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தவுடன் அவர் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி எனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அவரது அரசியல் பிரவேசம் குறித்து அரசியல் பிரமுகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க.வின் அரசியல் பிரமுகர் வானதி ஸ்ரீநிவாஸன் ரஜினி அவர்களின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவிக்கையில் அரசியல் களத்தில் கூடுதல் வீரர்கள் ரஜினி வர வேண்டும் என்பதையும் அதன் பின் கேப்டன் யார் என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்தார். இவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வரிசையா நிற்க ரஜினி வர வேண்டும் என்பதைத் தான் விரும்புவதாக பா.ஜ.க தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்திருந்ததும் ரஜினி விருப்பப்பட்டால் அவர் கட்சி ஆரம்பித்தவுடன் தன்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என நயினார் நாகேந்திரன் அவர்களும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply