பேரறிவாளனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பிணை கோரி, அற்புதம்மாள் தொடர்ந்த வழக்குக்கு எதிர்வரும் 08ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படுமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நிராகரிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்குட்படுத்திய நீதிபதிகள், எதிர்வரும் 08ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருக்கும் பேரறிவாளன், கடந்த 28 வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்

அவருக்கு 90 நாட்கள் பிணை கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பிணை கேட்டு அற்புதம்மாள் அனுப்பிய மனு நிராகரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக சிறைத்துறை விளக்கம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply