திருகோணமலை – படை முகாமில் ஏற்பட்ட அனர்த்தம்!

திருகோணமலை – சீனக்குடா விமான படை முகாமில் மின்சாரம் தாக்கி ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றையதினம் படை முகாமில் இடம்பெறவிருந்த நிகழ்வொன்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கிய ஐந்து விமானப்படை வீரர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனக்குடா விமானப் படை முகாமில் கடமையாற்றி வரும் தர்மேந்திரா (24 வயது), விக்ரமசிங்க (26 வயது), ரத்னசிறி (31 வயது), பிரதீப் குமார (31 வயது), திலகசிறி (39 வயது) ஆகியோரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply