தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அண்டையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே அவரது சட்டத்தரணி குறித்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரை இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி, மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே அவரது சட்டத்தரணியால் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதி அளிக்குமாறு கோரி குறித்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலை கண்காணிப்பாளர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்படுகின்றனர்.

அத்துடன் மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதாகவும் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply