அதிநவீன பீரங்கிகளுடன் சீனா!

இந்திய – சீன எல்லைப்பகுதியில் மோதல் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் சீன இராணுவம் அதிநவீன பீரங்கிகளை களமிறக்கியுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலடி வழங்க தாமும் தயார் நிலையில் உள்ளதாக இந்தியா இராணுவம் தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் மீண்டும் இந்தியா – சீனாவுக்கு இடையே மோதல் உருவாகி உள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் நீர் நிலைகளை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நிலையில், உயரமான மலைப்பகுதிகளை இந்தியா தன் வசப்படுத்தியுள்ளது.

இதனால் சீனா எடுக்கும் நடவடிக்கைகளை அறிந்த இந்தியா முன்னேற்பாடுகளை மிகவேகமாகச் செய்து வருகிறது.

கிழக்கு லடாக்கின் பாங்கொங் திசோ அருகிலுள்ள பிளாக் டாக், ஹெல்மேட், மால்டோ ஆகிய பகுதிகளில் சீன இராணுவம் தனது படைகளை களமிறக்கியுள்ளதுடன், பீரங்கிகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் குவித்துள்ளது.

இதற்கு தக்க பதிலடி வழங்கும் விதத்தில் சீன ஆயுதங்களை விட சக்தி வாய்ந்த நவீன ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply