விஜய் சேதுபதியின் கா. பெ. ரணசிங்கம்…..

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான திரைப்படம் கா. பெ. ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கே. ஜெ. ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்தை விருமாண்டி இயக்கியுள்ளார்.ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட பணியில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. கொரோனா காரணமாக அந்த பணிகள் தடைபட்டன.

சமுத்திர கனி, ராம், ராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே , பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் மக்களிடம் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காரணமாக பல திரைப்படங்கள் இணையதளத்தில் வெளிவருவதால் இந்த திரைப்படமும் அவ்வாறு வெளிவரும் என தவறான போஸ்டர் ஒன்று இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான மறுப்பினை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையத்தளத்தில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறு எனவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் காத்திருக்கவும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது,.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவதுமாக நிறைவேற்ற படம் தயார் நிலையில் உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் நடித்துள்ள சண்முகம் முத்துசாமி தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்த பதிவினை மேற்கொண்டு உள்ளார் ஆகவே திரை ரசிகர்கள் அனைவரும் இப்படத்தைக் காண ஆவலாக உள்ளனர்.

Be the first to comment

Leave a Reply