விஜய் அழைப்பிற்காக காத்திருக்கிறேன்….. பிரபல இயக்குனர் தகவல்……

கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன் பிறகு இந்த 13 வருடங்களில் அவர் இயக்கிய மொத்த திரைப்படங்கள் 5 மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆடுகளம் அசுரன் பொல்லாதவன் வட சென்னை என 4 படங்களுமே தனுஷ் நடித்த படமாகும்.

இவர் இயக்கிய திரைப்படம் விசாரணை தனுஷ் தயாரித்த படமாகும். இந்நிலையில் தனுஷுடன் மட்டுமே பயணித்து வந்த வெற்றிமாறன் ஏனைய நடிகர்களுடனும் பயணிக்க ஆரம்பித்திருகிறார். சூரி நடிக்க உள்ள திரைப்படத்தை இயக்க உள்ள இவர் அடுத்து சூர்யா நடிக்கும் வாடி வாசல் திரைப்படத்தையும் இயக்க உள்ளார். அடுத்ததாக விஜய் நடிக்கும் அடுத்த திரைப்பட இயக்குனர் வரிசையில் வெற்றிமாறன் பெயரும் உண்டு என தகவல் தெரிவிக்கிறது.

இந்நிலையில் வெற்றிமாறன் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் முதலில் சூரி படத்தை முடித்து விட்டு அதன் பின் சூர்யா நடிக்கும் வாடி வாசல் திரைப்பட பணிகளை தொடங்க போவதாகவும் அதன் பின் விஜய்கான கதையை தாயார் செய்ய ஆரம்பித்து விட்டதாகவும் அழைப்பிற்க்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதேவேளை ஷாருக்கானுக்கும் கதை சொல்லிருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply