யாழில் கஞ்சா போதையில் சென்ற காவாலிகளால் நேர்ந்த விபத்து!

சித்தன்கேணி பண்டத்தரிப்பு வீதியில் சித்தன்கேணி சந்திக்கு அருகில் விபத்து இடம்பெற்றது.

பண்டத்தரிப்பு பகுதியிலிருந்து சித்தன்கேணி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன்மீது சித்தன்கேணி சந்தியிலிருந்து பண்டத்தரிப்பு நோக்கி மிக வேகமாக கஞ்சா போதையில் சென்ற காவாலிகள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் முந்திச் செல்ல முடியாத வெள்ளைக் கோட்டையும் தாண்டி மறு பக்கத்தில் வந்தவர் மீது மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றது.

இதன்போது மூவரும் படுகாயம் அடைந்து தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் பனிப்முலத்தை சேர்ந்த திருஞானதீபன்(20),ரஞ்சன் (28) சங்கானையை சேர்ந்த பிரதீப்(26) என்பவர்களே படுகாயமடைந்தவர்களாவர்.

இந்தப் பகுதியில் சில வருடங்களாக தொடர்ச்சியாக இதே பாணியில் விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது விபத்துக்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பண்டத்தரிப்பு பனிப்புலத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் மது போதைக்கும் ,போதைப்பொருளுக்கும் அடிமையானவர்கள் என மக்கள் விசனம் தெரிவிப்பதோடு இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது தான் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு தமிழ் பொலிசார் ஒருவர் இதே முறையில் சம்பவ இடத்திற்கு அருகில் கஞ்சா போதையில் வந்த பனிப்புலத்தை சேர்ந்த இருவரால் மோதி கொல்லப்பட்டார். கடந்த வருடமும் வயோதிபர் ஒருவர் இதே பகுதியைச் சேர்ந்தவர்கள் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் மோதி கொல்லப்பட்டார். இதேபோன்று இப்பகுதியில் வேறு சில விபத்துக்களும் இடம்பெற்றுள்ளது. பொலிசார் இவ்வாறான இளைஞர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால்தான் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கமுடியும் என மக்கள் வினயமாக கேட்டுக் கொள்கின்றனர்.

Be the first to comment

Leave a Reply