அதிரடியாக தடை விதித்த அமெரிக்கா! ஸ்ரீலங்காவிற்கு பாதிப்பா?

அமெரிக்காவின் தடைகள் காரணமாக தனது திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என கொழும்புபோர்ட் சிட்டி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தடைகளால் தங்களுக்கான நிதிகள் கிடைப்பது தடைப்படவில்லை என போர்ட்சிட்டியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போர்ட்சிட்டியின் கட்டுமானப்பணிகள் தொடர்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தென்சீன கடல்பகுதியில் சர்ச்சைக்குரிய கட்டுமானபணிகளில் ஈடுபட்டுள்ள சீனாவின் சிசி நிறுவனத்திற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளமை ஆசியாவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த நிலையில், இலங்கையிலும் பிலிப்பைன்சிலும் இந்த நிறுவனம் ஆழமான பிரசன்னத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply