முதல் முறையாக கதை கேட்கும் முன்பே நடிக்க மறுத்தேன். லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி..

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே அம்மணி ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களை இயக்கியவரும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடம் தரித்து நடித்தவருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் முதன்முறையாக படத்தின் கதையை கேட்கும் முன்பே நடிக்கமறுத்தேன் என தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட பதிவு தற்போது பரபரப்பாகி வருகிறது.

கதை கேட்கும் முன்பே ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க மறுத்தேன். ஏனெனில் ஏற்கனவே நான் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன் மேலும் நான் இயக்கவிருக்கும் படம் தொடர்பான பணிகளை கூடிய விரைவில் ஆரம்பிப்பதாக உள்ளேன். என்னை விட ஒரு சிறந்த நடிகைக்கு இந்த திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்க இருக்கும் திரைப்படம் பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு இவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் என்ற திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆகவே இவர் இயக்க இருக்கும் இந்த திரைப்படமும் சிறந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply