கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு

வசர திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று பகல் 01 மணி தொடக்கம் நாளை காலை 7 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு- 01, 10 மற்றும் கொழும்பு 11 ஆகிய பகுதிகளில் இந்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது

Be the first to comment

Leave a Reply