”பாட்டி வைத்திய முறைப்படி முகத்தை அழகாக வைத்துக்கொள்ள உங்களுக்கான 7 சிம்பிள் டிப்ஸ்… ”

முகத்தை  அழகுபடுத்த  வீட்டில் ஏராளமான  வைத்திய குறிப்புகளை  நம் பாட்டி கூறியிருப்பார்கள். ஆனால்  நாம் அதை கேட்காமல் கடைகளில் விற்கும்  அழகு சாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி  இருப்போம். அவை பின்விளைவுகளை ஏற்படுத்திய பின்பு  தான் நாம் இயற்கை வைத்திய குறிப்புகளை கையாள்வோம்.

இயற்கை பொருட்களை வைத்தே, அதிகம் செலவில்லாமல், முகத்தை  அழகு படுத்துவது எப்படி என்பதை இதில்  காணலாம்.

கண்களை  அழகாக்க:

  • கண்கள்  அழகாகவும், புத்துணர்ச்சியுடனும்  இருக்க வேண்டுமென்றால், அதற்கு வெள்ளரிக்காயை  நீங்கள் உபயோகிக்கலாம். வெள்ளரியை வட்டமான துண்டுகளாக  நறுக்கி கண்களில் வைத்து சிறிது நேரம் கண்களை மூடியே  இருக்க வேண்டும். இது கண்களில் உள்ள கருவளையங்களை மறைத்தும், கண்களில்  உள்ள சோர்வையும் நீக்கி விடும்.
  • நீங்கள்  எந்த விதமான  பேஷியல் செய்தாலும், இறுதியில்  உங்கள் கண்களுக்கு வெள்ளரி தான்  வைப்பார்கள். காரணம் வெள்ளரியில் உள்ள ஏராளமான சத்துக்கள் , கருவளையங்களை மறைத்து விடும் .

குளிர்ந்த  நீரில் முகத்தை  கழுவுதல்:

தினமும்  முகத்தை நான்கு  முதல் ஐந்து முறை கழுவ  வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள்  மற்றும் தூசுக்கள் மறைந்து முகம் பொலிவுடன் இருக்கும்.

ஆவிப் பிடித்தல்:

முற்காலத்தில்  ஸ்கரப் மற்றும் அழகுக்கு என  தனி சிகிச்சைகள் இருக்காது. எனவே  அதற்காக பெண்கள் ஆவி பிடித்து முகத்தை  பராமரித்து வந்தனர், இதனால் முகத்தில் உள்ள  பருக்கள் மறைவது மட்டுமில்லாமல், முகமும் பளிச்சென்று  மாறிவிடும்.

பழங்கள்:

மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி  போன்ற பழங்களை வைத்து மாஸ்க் செய்து போடலாம். இதனால் முகம் இளமையாக இருப்பது மட்டுமில்லாமல், நல்ல குளிர்ச்சித்தன்மையுடனும்  இருக்கும்.

முடி மசாஜ்:

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெயை லேசாக  சூடாக்கி அதை கூந்தலுக்கு  தேய்த்து நன்கு மசாஜ் செய்ய  வேண்டும். அரைமணி நேரம் கழித்து  தலையை அலசிக் கொள்ளலாம். இதே போல்  இரவில் தலைக்கு எண்ணெய் வைத்துவிட்டு  காலையில் கூந்தலை அலசினாலும், முடி வளர்ச்சி  அதிகரித்து கூந்தல் மின்ன செய்யும்.

தயிர்:

கூந்தலுக்கு  தயிரை பயன்படுத்துவதால்  கூந்தல் நன்கு மின்னுவது மட்டுமில்லாமல்  ஆரோக்கியமாகவும் இருக்கும். எலுமிச்சை சாற்றுடன்  தயிரை கலந்து கூந்தலுக்கு தடவி விட வேண்டும். அரை  மணி நேரம் கழித்து முடியை அலசிக் கொள்ளலாம். இதனால் பொடுகு  மற்றும் அரிப்பு பிரச்சனை விரைவில் குறைந்துவிடும்

முகத்தை  பொலிவாக்க:

முகத்தை  பொலிவுடன்  வைத்துக்கொள்ள  கடுகு எண்ணெய் அல்லது  தேங்காய் எண்ணெய் உதவுகிறது. இந்த  எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்து, சிறிது  நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். பின்பு முகத்தை அலசிக்  கொள்ளலாம். இதனால் சருமம் பளிச்சென்று இருக்கும்.

உதடுகளுக்கு:

உதடுகளில்  உள்ள வறட்சி, வெடிப்பு  போன்றவற்றை தவிர்க்க உதடுகளுக்கு  நாம் நெய் உபயோகிக்கலாம். நெய் தடவுவதால்  உதடுகள் பளபளப்பாகவும். மென்மையாகவும் இருக்கும்.

Be the first to comment

Leave a Reply