சர்வதேச விசாரணைதான் ஒரேவழியாக அமையமுடியம்-கலாநிதி குமரகுருபரன்!

காணாமல் போனோர் விடையத்தில் நீதியாக அணுக மறுக்குமானால் சர்வதேச விசாரணைதான் ஒரேவழியாக அமையமுடியம்-கலாநிதி குமரகுருபரன்!
காணாமல் போனோர் விடையத்தில் அரசாங்கம் நீதியாக நியாயமாக அணுக மறுக்குமானால்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியது போல் சர்வதேச விசாரணைதான் ஒரேவழியாக அமையமுடியும் தமிழ்மக்கள் விட்டுக்கொடுப்பு இல்லாமல் இருக்கவில்லை 
போர் நடைபெற்றது உண்மை, மக்கள் படுகொலைசெய்யப்பட்டது காணாமல் ஆக்கப்பட்டது உண்மை, இதற்காக சிங்கள தேசம் மனநீதியுடன் மனுநீதியுடனும் பதிலினை சொல்லவேண்டும். என்று முன்னால் மேல் மாகாணசபை உறுப்பினரும் தமிழ்தேசிய பணிக்குழு தலைவருமான கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவில் வைத்து தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் பேசுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முன்னால் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் தமிழ்மக்களின் அபிலாசைகளைத்தான் வலியுறுத்துகின்றார்.ஒன்றுபட்ட நாட்டிற்குள்தான் தீர்வினை எதிர்பாக்கின்றார்கள் தனிநாடு கோரவில்லை.
தமிழ்மக்களின் பிரச்சனையினை காணாமல் போனவர்களின் உறவினர்களின் உள்ள நிலை எப்படி இருக்கும் என்பதனை தெரிந்து கொண்டு சிங்கள தலைவர்கள் பேசவேண்டும்.
விக்னேஸ்வரன் அவர்களையும் கஜேந்திரகமார் அவர்களையும் இனவாதிகளாக பேசுகின்றார்கள் என்றால்  சரத்வீரசேகர மிகமோசமான இனவாதத்தினை கக்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.
சரத்வீரசேகர இனவாதத்தினை பேசிக்கொண்டு இவர்களை இனவாதிகள் என்று சொல்வதற்கு எந்த அருகதையும் கிடையாது.தமிழ்மக்களின் அபிலாசைகளைத்தான் அவர்கள் பேசுகின்றார்கள் இனவாதம் பேசுவதில்லை ஒன்று பட்ட ஜக்கிய இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வினை ஏற்றுக்கொள்ள தயார் என்று  தெளிவாக சொல்லியுள்ளார்கள் 
இவர்கள் வாக்கினை பெற்றுக்கொள்வதற்காக தமிழ்மக்கள் மீது இனவாதம் பேசுகின்றார்கள் 
காணாமல் போனவர்கள் பலர் கையில் ஒப்படைத்தவர்கள் இன்றும் சாட்சியமாக இருக்கின்றார்கள் இதற்கு பதில் சொல்லவேண்டும் பதில் சொல்லவில்லை என்றால் அங்கு யுத்தகுற்றம் இடம்பெற்றிருக்கின்றது.
இதற்கான நீதி நாட்டிற்குள் இல்லை என்றால் கஜேந்திரகுமார் சொல்வது போன்று சர்வதேச விசாரணையினைத்தான் எதிர்பார்க்கவேண்டும் என்றும் கலாநிதி குருபரன் தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply