கடமைகளை பொறுப்பேற்ற அங்கஜன்!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக அங்கஜன் இராமநாதன் தனது கடைமைகளை உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகார சபையின் அலுவலகம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் அரசாங்க அதிபர் முன்னிலையில், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக அங்கஜன் இராமநாதன் தனது கடைமைகளையும் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

நிகழ்வில் மாவட்ட செலயக உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் ஆணையாளர் மற்றும் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply