ஸ்ரீலங்கா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் தற்போது நிலவும் அதி உஷ்ணமான காலநிலையிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டுமென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
உஷ்ணம் காரணமாக சரும நோய்கள் உட்பட உடல் வறட்சி போன்ற நிலமைகளுக்கு மக்கள் முகங்கொடுக்க நேரிடுமென கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி புஸ்பா ரம்யானி டி சில்வா தெரிவித்துள்ளார்.
முற்பகல் 10.00 மணிமுதல், பிற்பகல் 02.00 மணிவரையான காலப்பகுதியில் வெளியில் செல்வதை மக்கள் தவிர்ப்பது சிறந்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சரும அழற்சி, உடல் வறட்சி, தலைவலி, உடல் எரிச்சல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. இதனால் வெளியில் செல்லும்போது உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்றவேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 7ம் திகதி வரை நாட்டின் சில பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் பகல் பொழுதில் அதிக உஷ்ணத்துடன் கூடிய வானிலை நிலவும். நாட்டின் கிழக்கு மாகாணத்திற்கு இதனால் அதிக பாதிப்புகள் இருப்பதாக வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்

Be the first to comment

Leave a Reply