விக்னேஸ்வரன் கூறியது முற்றிலும் தவறு-எஸ். பீ.திஷாநாயக்க

நாட்டில் ஜாதி, மதம் பாராது ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற மக்கள் இடையில் சீ. வீ. விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான எஸ். பீ.திஷாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் மஸ்கெலியா சமன் தேவாலயத்தில் விஷேட வழிபாடுகளில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீ. வீ. விக்னேஸ்வரன் தேவையில்லாத ஒரு கருத்தினை கூறியிருக்கிறார். நாட்டில் முதல் மொழி தமிழ், சிங்களம் என்று கூறுவதற்கு அவர் அனைத்தும் அறிந்தவர் அல்ல.
அவர் ஒரு நீதிபதி, நாட்டில் என்ன மொழியென கூற அனைத்தும் அறிந்தவர்கள் அதிகமாக உள்ளனர். தொல்பொருள் அறிஞர்கள் உள்ளார்கள்.
ஆகையால் அவர் முதலில் சிங்கள மொழியைக் கற்றுகொள்ள வேண்டும். தமிழ் மொழியை முறையாக கற்றுகொள்ளவேண்டும்.அவருடைய பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்றுகொடுக்க வேண்டும்.
ஆகவே அவர் தமிழ், சிங்களம், முஸ்லிம் போன்ற மதங்களை சார்ந்த மக்கள் மத்தியில் பிரச்சினையை தோற்றுவிக்க கூடிய ஒரு கருத்தினை கூறியிருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply