இலங்கையில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

குடி நீரை விநியோகிக்கும் பிரதான நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவும் வறட்சி காரணமாகவும் நாட்டின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உயர் நிலப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் வினியோகிக்கப்படும் என தேசிய நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலையில் மக்கள் அனைவரும் நீரை மிகவும் சிக்கனமான முறையிலும் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பயன்படுத்துமாறு சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. தற்போது நாட்டு மக்களின் நீரின் தேவை அதிகரித்தமையின் காரணமாகவும் வழங்குவதற்கான நீர் குறைவாக இருப்பதன் காரணமாகவும் நீருக்கு பற்றாக்குறையான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சகல மக்களுக்கும் சரியான முறையில் நீரை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் நீரின் பாவனையில் சிக்கனத்தை கடைபிடிக்கும் அனைவருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply