இலங்கையில் ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

இலங்கையில் ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (ஓகஸ்ட்-31) முன்னதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதிய செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதையடுத்து கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 3049 ஆக அதிகரித்துள்ளது.

நேற்யை தினம் இறுதியாக அடையாளம் காணப்பட்ட 31 பேரும் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 8 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களது எண்ணிக்கை 2868 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனால் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 169 ஆக உள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply