யுவன் சங்கர் ராஜாவுக்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி அசத்திய நடிகர் விவேக்

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் திரைப்பிரபலங்கள் மட்டுமன்றி அவரது ரசிகர்கள் அனைவருமே அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். அந்த வகையில் சின்ன கலைவாணர் நடிகர் விவேக் அவர்கள் யுவன்சங்கர் ராஜாவுக்கும் வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

அதாவது யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ரவுடி பேபி என்ற பாடலை பியானோவில் வாசித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி ஆகியோரின் நடிப்பில் உருவாகி வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் மாரி 2.

இந்த திரைப்படத்தில் ரவுடிபேபி எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி திரையுலகப் பிரபலங்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்தத் திரைப் பட பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணிபுரிந்தார். இந்த பாடலுக்கான நடன அமைப்பு அனைவரது மனதையும் கவர்ந்தது. இந்த திரைப்பட பாடலை பியானோவில் வாசித்து விவேக் அவர்கள் யுவன் சங்கர் ராஜாவை அசத்தி பிறகு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply