சிவகார்த்திகேயன் குறித்து உண்மைகளை வெளியீட்ட அயலான் பட நடிகை..

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து உருவாகி வரும் திரைப்படம் அயலான். இன்று நேற்று நாளை என்ற திரைப்படத்தினை இயக்கி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ரவிக்குமார் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத்தி நடித்து வருகிறார். மேலும் இந்தத் திரைப்படத்தில் ஈஷா கோபிகார், யோகி பாபு கருணாகரன், பாலசரவணன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சில காரணங்களால் தள்ளிப்போனது இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் பிப்ரவரியில் சென்னையில் தொடங்கியது.

பின்னர் கொரோனா காரணமாக அந்த படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன. மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஈஷா கோபிகர் சமீப காலத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயன் பற்றி கூறுங்கள் என்று கேட்டபோது அவர் ஒரு நல்ல மனிதர் நல்ல நடிகர் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் சாதாரண மனிதரைப்போல் பழகுவார். எந்த நேரமும் ஜாலியாக இருப்பார் என்று கூறினார்.

Be the first to comment

Leave a Reply