நானே முன்னாள் இராணுவத் தளபதியை வடக்கிற்கு ஆளுநராக நியமிக்க கோரினேன்!

வடக்கில் முன்னாள் ராணுவ அதிகாரி ஜெனெரல் சந்திரசிறிக்கு பின்னர் நியமிக்கபட்ட எந்த சிவில் அதிகாரிகளும் தமது வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று விஐயம் செய்த அவர் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளை சந்தித்துவிட்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அரச நியமனங்களில் பலரது விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களிற்காக நிராகரிக்கபட்டுள்ளதாக அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குவால் அவர்களது சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பின் அவர்கள் பட்டதாரிகளாக உள்வாங்க்கப்படவேண்டும் என்பது தான் அரசாங்கத்தினுடைய இறுதி நிலைப்பாடாக இருந்தது.

அந்த வகையில் மேலதிகமாக 10 ஆயிரம் பேருக்கு அரச நியமனத்தை வழங்குவதற்கு ஐனாதிபதி இணங்கியிருக்கின்றார். அந்தவகையில் ஈபிஎப், மற்றும் மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கிகரிக்கப்பட்டிருந்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் மேல்முறையீட்டிற்காக விண்ணப்பிக்கமுடியும்.

Be the first to comment

Leave a Reply