மின் தடை குறித்த விசாரணை ஆரம்பம், 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க்ப்பட வேண்டும்.

நேற்றய தினம் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக 9 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ராஹூல அதலகேயின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடைப்பட்டமை குறித்து ஆராய்ந்து 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த குழுவிற்கு பணிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் முதற் கூட்டம் இன்று (18) காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதேவேளை, மின் விநியோகம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபையிடம் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில், முழுமையான அறிக்கையை ஒரு மாதத்திற்குள் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளவிய ரீதியில் தடைப்பட்ட மின்சார விநியோகம் நேற்றிரவு (17) 10 மணியளவில் வழமைக்கு திரும்பியதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், தொழில்நுட்ப கோளாறு தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதால் நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply