முடிவை பகிரங்கமாக அறிவித்தார் மணிவண்ணன்!!!
இதுதான் எனது முடிவு:இன்று அல்லது நாளை பகிரங்கமாக அறிவிக்க தயாராகிறார் மணிவண்ணன்!

August 17, 2020

32

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொறுப்புக்களில் இருந்த விலக்கப்பட்டுள்ள மணிவண்ணன், இன்று அல்லது நாளை செய்தியாளர்களை சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை அளிக்கவுள்ளார்.

சில பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி, கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து மணிவண்ணனை தூக்கியெறிவதென, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு முடிவெடுத்தது.

இந்த அறிவித்தலை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வட்ஸ்அப் வழியாக மணிவண்ணனிற்கு அனுப்பியிருந்தார். எனினும், அந்த அறிவிப்பில் கட்சி தலைவர், செயலாளரின் கையொப்பமிருக்கவில்லை.

இதை மணிவண்ணன் தரப்பு சுட்டிக்காட்டியதையடுத்து, பதிவு தபால்மூலமும் கட்சியின் முடிவு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்றும், நேற்று முன்தினமும் விடுமுறையென்பதால், இன்று அந்த அறிவித்தல் மணிவண்ணனின் கையில் கிடைக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவித்தல் கிடைத்ததும் தனது நிலைப்பாட்டை செய்தியாளர்கள் மத்தியில் மணிவண்ணன் அறிவிக்கவுள்ளார்.

இதேவேளை, நேற்றும் மணிவண்ணன் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் குழுமினர். அனேகமாக இளைஞர்களே குழுமியிருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தை முற்றுகையிடப் போகிறோம், கட்சியை நம்பி அளித்த வாக்கை திருப்பித் தாருங்கள் என கோரப் போகிறோம் எனஎஇளைஞர்கள் விடாப்பிடியாக நின்றனர்.

எமது வாக்கை திருப்பி தாருங்கள் என நாடாளுமன்றத்திற்கு தெரிவான இருவரிடமும் கோரப் போவதாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர்.

எனினும், நேற்றும் இளைஞர்களை மணிவண்ணன் சமரசப்படுத்தினார். தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் துண்டுதுண்டாக உடைந்து வரும் நிலையில், முன்னணியும் உடைவது மக்களை அவநம்பிக்கைப்படுத்தும், அதனால் கட்சியை விட்டு வெளியேறும் உத்தேசம் எனக்கு இதுவரை இல்லை. உணர்ச்சிவசப்படாமல் நிலைமையை கையாள வேண்டும் என நேற்றும் ஆதரவாளர்களை சமரப்படுத்தினார்

Be the first to comment

Leave a Reply