மாநிறம்/ பொதுநிறமா இருக்கோம்னு கவலைப்படறீங்களா? இந்த மேக்கப் போடுங்க… பளிச்னு தெரிவீங்க…

நீங்கள் அதிகம் கலராக இல்லையா? கவலைய விடுங்க.

இனி நீங்களும் மேடையில் / அரங்கில் அழகாக ஜொலிக்க முடியும். பொதுவாக மங்கலான சருமம் உடையவர்கள் கவர்ச்சியாக இருப்பார்கள்.

பாதாம் நிறமும், சூரியனின் சுடர் ஒளி நிறமும் உங்களுக்கு கிடைத்த பரிசு. நம் நாட்டில் அழகு என்றால் சிவப்பாக இருப்பவர்களை மட்டுமே கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் உலகளவில் மங்கலான சருமம் உடையவர்களே கவர்ச்சியாகவும் அழகாகவும் காணப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

எனவே இனி உங்கள் மங்கலான சருமத்தை நினைத்து கவலைப்படாதீர்கள். உங்களுக்காகத்தான் நாங்கள் சில அழகு குறிப்புகளைப் பற்றி இங்கே கூற உள்ளோம்.

உங்கள் சருமத்தை சுத்தமாக்குங்கள்

முதலில் உங்கள் முகத்தை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். இது உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் தூசிகளை நீக்கும். மங்கலான சருமம் உடையவர்கள் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும். இதை நீங்கள் சரியாக செய்யாவிட்டால் உங்கள் முகம் களைப்படைந்து பொலிவு இழந்தது போல் காணப்படும். எனவே தொடர்ந்து முகத்தை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். எனவே உங்கள் திருமண நாளுக்கு இரண்டு வாரத்திற்கு முன்னதாகவே இதை செய்யத் தொடங்கி விடுங்கள். முடிந்தால் ரொம்ப ஆழமாக அல்லது இரண்டு தடவை க்ளீனிங் செய்வது நல்லது.

சருமத்தை ஈரப்பத மூட்டுதல்

அரங்கில் /மேடையில் நீங்கள் அழகாக ஜொலிக்க வேண்டும் என்றால் உங்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்க வேண்டும்.அதிலும் மங்கலான சருமம் உடையவர்கள் இதை தினசரி செய்ய வேண்டும். கண்களுக்கு கீழே ஈரப்பதமூட்ட மறந்து விடாதீர்கள். நீங்கள் சரியாக இதைச் செய்யா விட்டால் கண்களுக்கு கீழே கருவளையம் வந்து விடும்.

பவுண்டேஷன் அப்ளே செய்யுங்கள்

பவுண்டேஷனை நீங்கள் சரியாக பயன்படுத்தும் போது உங்களுக்கு நல்லதொரு லுக் கிடைக்கும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற பவுண்டேஷன் கலரை தேர்ந்தெடுங்கள். அப்படி சரியான கலர் கிடைக்கா விட்டால் இரண்டு பவுண்டேஷன் கலரை மிக்ஸ் செய்து பொருத்தமான நிறத்தை பெறுங்கள். எண்ணெய் பசை சருமம் உடையவர்களுக்கு மேட்டி அல்லது பாதி மேட்டியான பவுண்டேஷனும் வறண்ட சருமம் உடையவர்களுக்கு ட்வீ பவுண்டேஷனும் கொடுங்கள்.

மேக்கப்பை சமப்படுத்துங்கள்

டிரான்ஸ்யூலன்ட் பவுடர் கொண்டு மேக்கப்பை சமப்படுத்துங்கள். இது உங்கள் மேக்கப்பிற்கு நல்ல ஸ்மூத் ஆன லுக்கை கொடுப்பதோடு மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க உதவி செய்கிறது. எந்த வித நிறமும் இல்லாத செட்டிங் பவுடரை பயன்படுத்துங்கள். இதுவே உங்கள் மேக்கப்பிற்கு நல்ல அடித்தளத்தை தரும்.

ப்ளஷ் லுக்

ப்ளஷ் உங்களை அழகாக காட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் மங்கலான சருமம் உடையவர்களுக்குத் தான் இது மிகவும் பொருத்தமாக இருக்கும். எனவே உங்கள் நிறத்திற்கு தகுந்த ப்ளஷ் நிறத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். கோரல், ஆழ்ந்த ஆரஞ்சு நிறம், பீச் மற்றும் ரோஸ் கலர் உங்களுக்கு எடுப்பாக இருக்கும்.

மெட்டாலிக் ஐ லுக்

மங்கலான சருமம் உடையவர்களுக்கு மெட்டாலிக் ஐ ஷேடோ நிறங்கள் நல்ல ஜொலிப்பை தரும். அதிலும் தங்க நிற ஐ ஷேடோ உங்களுக்கு கவர்ச்சிகரமான கண்களைத் தரும். கண்களுக்கு மேலே அடர்ந்த நிறங்களான நீலம் அல்லது காப்பர் நிறத்தில் ஐ ஷேடோ பயன்படுத்தி அதன் மேல் கோல்டன் ஐ ஷேடோ பயன்படுத்தினால் போதும். இது உங்கள் திருமண விழாவிற்கு ரெம்ப பொருத்தமாக அமையும்.

லிப் ஷேட்ஸ்

திருமண விழா என்றாலே மணப்பெண்களுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக்கையே பொதுவாக பயன்படுத்துகின்றனர். ஆனால் மங்கலான சருமம் உடையவர்கள் வெவ்வேறு விதமான லிப்ஸ்டிக் ஷேட்ஸ்களை பயன்படுத்தலாம். ப்ளெம், வொயின், காப்பர், சாக்லெட் மற்றும் பெர்ரி போன்ற வெவ்வேறு விதமான லிப்ஸ்டிக்களை நீங்கள் பயன்படுத்தலாம். லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதற்கு முன் பென்சிலைக் கொண்டு உங்கள் உதட்டை அழகாக வரைந்து கொள்ளுங்கள். இது உங்கள் உதடுகளை எடுப்பாக காட்ட உதவும்.

ஓவர் மேக்கப் வேண்டாம்

தயவு செய்து ஓவர் மேக்கப் படாதீர்கள். இது உங்களுக்கு மண மேடையில் சங்கடத்தை ஏற்படுத்தி விடும். இயற்கையான நிறமே அழகாக இருக்கும். எனவே மிதமான மேக்கப்பை போட்டு அழகாக ஜொலியுங்கள். போல்டு கலர் லிப்ஸ்டிக், போல்டு ஐ லுக் வேண்டாம். எல்லாவற்றையும் சமமாக செய்து மண மேடையில் நில்லுங்கள். நீங்களும் தேவதை போன்று ஜொலிப்பீர்கள்.

Be the first to comment

Leave a Reply