யாழ்.மாநகர பல பகுதிகளிலும் நாளை மின்தடை

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை மின்தடை

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை மின்தடை!

15th August 2020

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(16) காலை-08.30 மணி முதல் மாலை- 05 மணி வரை யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ். கந்தர்மடம் சந்தி, கந்தர்மடம் அம்மன் வீதி, பலாலி வீதியில் திருநெல்வேலிச் சந்தியிலிருந்து பலாலி வீதி வேம்படிச் சந்தி வரை, பனிக்கர் லேன், திண்ணை விடுதி, தலங்காவில் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி கொமர்சல் வங்கி, தபால் பெட்டிச் சந்தி, இலுப்பையடிச் சந்தி, சிவன்- அம்மன் வீதி, அன்னசத்திர வீதி, ஆரியகுளம் சந்தி, நாவலர் வீதியில் புகையிரதக் கடவையிலிருந்து அம்பலவாணர் வீதி அத்தியடி வரை, பலாலி வீதியில் பருத்தித்துறை வீதியிலிருந்து வீரமாகாளி கோவில் வரை, ஆரியகுளம் சந்தியிலிருந்து இராசாவின் தோட்டச் சந்தி வரை, கம்பஸ் லேன், தின்னவேலி புறப்பர்ட்டி டெவலப்பர்ஸ் பிறைவேற் லிமிற்ரெட், நொதேர்ண் சென்ரல் கொஸ்பிற்றல், Bright Inn, AVNOR பிறைவேற் லிமிற்ரெட், டம்றோ பலாலி வீதி, IBC தமிழ், BCCAS ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Be the first to comment

Leave a Reply