பாடகர் எஸ்பிபி உடல் நிலை தொடர்பில் இன்று வெளியாகிய தகவல்!

பாடகர் எஸ்பிபி உடல் நிலை தொடர்பில் இன்று வெளியாகிய தகவல்!

பாடகர் எஸ்பிபி உடல் நிலை தொடர்பில் இன்று வெளியாகிய தகவல்!

August 15, 2020

பாடகர் எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை நேற்று கவலைக்கிடமாக இருந்தது.

இந்நிலையில், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எம்ஜிஎம் மருத்துவமனை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ள நிலையில், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாக மருத்துவமனை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply