சுட்டெரிக்கும் வெயிலில் செமயா தெரியனுமா? கீழே உள்ள டிப்ஸ் try பண்ணி பாருங்க…

வெயில்லை சமாளிக்க….!

முகப் பொலிவு பாதிக்கப்படாமலிருக்க எலுமிச்சை சாறுடன் சிறிது பாலை கலந்து குழைத்து பிறகு அதை விரல்களால் எடுத்து முகம் முழுவதும் தடவி 10 நிமிடங்கள் ஊறிய பின் கழுவ வேண்டும். இதனால் முகம் தனி அழகு பெறும்.

முகம் வறண்டு காணப்படுபவர்கள் வாழைப் பழத்துடன் பன்னீர் சேர்த்து மிக்ஸியில் அடித்து முகத்தில் தடவினால் வறண்ட தன்மை நீங்கும்.

கோடை வெப்பத்தால் சிலருக்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அதற்கு சில துளி நல்லெண்ணையோடு அதே அளவு நீர்த் துளிகளைச் சேர்த்து குழைத்தால் வெண்மையாகி பற்பசை போல நுரைக்கும். முகத்தில் இதைத் தடவி உரசித் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கிவிடும்.

உஷ்ணத்தால் தலைமுடி மிகவும் வறண்டு இருப்பவர்கள், தலையில் தயிரை நன்கு தடவி சிறிது நேரம் ஊறிய பின்னர் கூந்தலை அலசினால் கூந்தல் பளபளக்க ஆரம்பிக்கும்.

வெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோர்வாக உள்ளதா? சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக் கொண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்கள் புது ஒளி பெற்றுவிடும்.

வெயிலில் வெளியே போய்விட்டு வரும்போது கண்களைச் சுற்றிக் கருவளையம் தோன்றுவது தவிர்க்க முடியாதது. கறிவேப்பிலையை இடித்து சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயை எடுத்து அதோடு கலந்து கண்களைச் சுற்றி பூசினால் கருவளையம் மறைந்துவிடும்.

ஒரு நாளைக்குக் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட பீட்ரூட் பேஸ்ட்டை முகத்தில் பூசி 5 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் சுமார் 10 நிமிடங்கள் கழித்து சோப்பை உபயோகித்தோ அல்லது கடலை மாவை உபயோகித்தோ முகம் கழுவ வேண்டும்.

சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து அதனுடன் 4 அல்லது 5 துளி பாலைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply