உங்கள் குழந்தைகளுக்கு புதிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விருப்பமா???

எந்த விதமான இரசாயனம் கலக்காத வீட்டிலேயே இலகுவாக செய்யலாம்.

ஆப்பிள் அல்வா

தேவையானவை

ஆப்பிள் scrabed – 2 கப்
கோதுமை மா – 2 க‌ப்
நெய் – 100 ‌கிரா‌ம்
ஏலப்பொடி – சிறிதளவு
பால் – 2 க‌ப்
முந்திரிப் பருப்பு – 1 கை‌ப்‌பிடி
கேசரிப் பவுடர் – 1/2 பின்ச்
சர்க்கரை – 4 க‌ப்

செ‌ய்யு‌ம் முறை

பாலில் scrabbed ஆப்பிளைப் போட்டு வேகவிடவும். நன்கு வெந்த பிறகு மசிக்கவும்.

இதனுடன் கோதுமை மாவைக் கரை‌த்து கலந்து ‌விடவு‌ம். ‌பிறகு கேசரிப் பவுடரைச் சேர்த்துக் கிளறவும்.

சர்க்கரையையும் கலந்து சற்று இறுகியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும்.

அல்வா பதம் வந்ததும், முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கி விடவும்.

ஆப்பிள் அல்வா தயார்!

Be the first to comment

Leave a Reply