இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள தீவு நாடான #மொரீஷியஸுக்கு அருகே ஜப்பானிய நிறுவனத்தைச் சேர்ந்த ஜப்பானிய எண்ணெய் டேங்கர் விபத்து…!

இதன் காரணமாக சுமார் 1000 டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 4,000 டன் கச்சா எண்ணெயைக் கொண்டு சென்ற கப்பல் ஜூலை 25 ம் தேதி மொரீஷியஸ் தீவுக்கு அருகே மோதியது.

எம்.வி.வகாஷியோ என்ற கப்பல் பவளப்பாறை மீது மோதியதாகவும், இதன் விளைவாக கப்பல் பிளவுபடும் அபாயம் இருப்பதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொரீஷியஸின் பிரதமர் கூறுகையில், மழைக்கால வானிலை அதிகரிப்பதால், கப்பலில் உள்ள மற்ற எரிபொருள் எதிர்காலத்தில் கடலில் கொட்டப்படும் அபாயம் உள்ளது.

இதுபோன்ற நிலை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கிடையில், கொட்டப்பட்ட எரிபொருள் மொரீஷியஸின் தீவுக்கூட்டத்திற்கு அருகிலுள்ள கடலோரப் பகுதிகளுக்கும், பவளப்பாறைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பேரழிவிலிருந்து சுற்றுச்சூழல் மற்றும் மொரீஷியஸ் கடற்கரையை காப்பாற்றுவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரணப் பணியாளர்கள் கடலில் இருந்து கச்சா எண்ணெயை அகற்றுவதற்காக பணியாற்றி வருகின்றனர், மேலும் பிரான்சும் அதன் நிவாரணக் குழுக்களில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

Be the first to comment

Leave a Reply