Lipstick இனை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா? இதோ சில tips..

எம்மை ஒருவர் பார்த்தவுடன் முதலில் கவனிப்பது நம் கண்களை. அதற்கு அடுத்தபடியாக கவனிப்பது நம் உதடுகளைத் தான்.

நாம் போடும் மேக்கப்பினை உயர்த்தி காட்டுவது Lipstick தான். எவ்வளவு தான் மேக்கப் போட்டாலும் அதற்கு தகுந்ற் போல் Lipstick இல்லாவிடின் மேக்கப் போட்டதற்கான பொலிவு இருக்காது.

அப்படிப்பட்ட லிப்ஸ்டிக்க்கை உங்களின் சருமத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து உபயோகிப்பது முக்கியம். லிப்ஸ்டிக்க்கள் உங்கள் உதடுகளுக்கு வண்ணங்களைச் சேர்ப்பதால் முகத்தின் அழகை உயர்த்தி காட்டுகிறது.

உங்கள் சருமத்திற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்று சில குறிப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளன. அவற்றின்படி சரியான லிப்ஸ்டிக்கை தேர்வு செய்து அழகாய் பொலிவுடன் இருங்கள்.

சரும நிறம்

சருமத்திற்கு பொறுத்தமான லிப்ஸ்டிக் வண்ணத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பு உங்கள் சருமத்தின் நிறம் என்ன என்பதைக் கண்டறியுங்கள்.

அதாவது சருமத்தின் நிறங்கள் 5 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. பால் நிற வெள்ளை சருமம், வெள்ளை சருமம், நடுத்தர நிற சருமம், பழுப்பு நிற சருமம் மற்றும் கருமை நிற சருமம் ஆகும்.

பால் வெள்ளை மற்றும் வெள்ளை நிற சருமம் கொண்டவர்கள் பிங்க், கோரல், பீச், நியூடூ மற்றும் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யலாம்.

நடுத்தர நிற சருமம் கொண்டவர்கள் ரோஸ், பெர்ரி, செர்ரி சிவப்பு, மற்றும் மெவ் நிற லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யும் போது மிக அழகாகக் காட்சியளிப்பார்கள்.

பழுப்பு நிற சருமம் கொண்டவர்கள் கோரல், டீப் பிங்க், பிரைட் ரெட் போன்ற வண்ணங்களைத் தேர்வு செய்யலாம். ஆனால் பிரவுன் மற்றும் வைல்ட் போன்ற வண்ணங்களைத் தவிர்க்கலாம்.

கருமை நிறம் கொண்டவர்கள் பிளம், கேரமல், ஒயின் போன்ற வண்ணங்களைத் தேர்வு செய்யலாம்.

உதட்டின் வடிவம்

உதட்டின் வடிவம் சற்று கனமாக இருந்தால் அதற்கேற்ப லிப்ஸ்டிக்கை தேர்வு செய்ய வேண்டும். அதாவது மேல் பகுதியில் கனமான உதடுகள் இருந்தால் உதடுகளின் அடிப்பகுதியில் பிரகாசமான லிப்ஸ்டிக்கும், மேல் உதட்டில் அதே நிறத்தில் சற்று இருண்ட வண்ணத்தை இடுங்கள். கீழ்ப் பகுதியில் கனமான உதடுகள் இருந்தால் உங்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக்கை தேர்வு செய்துவிட்டு மேல் உதட்டின் நடுப்பகுதியில் நியூடூ லிப்ஸ்டிக் போடுங்கள். மேலும் உங்களுக்குச் சமச்சீரற்ற உதடுகள் இருந்தால் உதடுகளை முதலில் லிப்ஸ்டிக் பென்சில் பயன்படுத்திக் கோடிட்டுக் கொண்டு பின்னர் லிப்ஸ்டிக் பயன்படுத்துங்கள்.

உதட்டின் அளவு

உங்களுக்கு மிகச் சிறிய மெல்லிய உதடுகள் இருந்தால் டார்க் மற்றும் ஒளிரும் வண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த நிறங்கள் உங்கள் உதடுகளை இன்னும் மெல்லியதாகத் தோன்றச் செய்யும். பளபளப்பான அல்லது க்ரீமி நிற லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள். மேலும் குண்டான உதடுகள் உள்ளவர்கள் மங்கிய நிறம் கொண்ட லிப்ஸ்டிக்கை தவிர்க்கலாம்.

கண்களின் நிறம்

உங்களின் கருவிழி என்ன நிறத்தில் உள்ளது என்று முதலில் கண்டு கொள்ளுங்கள். உங்கள் கருவிழி பிரவுன் நிறத்திலிருந்தால் பிரைட் ரெட், பிரவுன் மற்றும் லைட் பிங்க் நிறங்களையும், ப்ளூ நிற கருவிழி இருந்தால் செர்ரி நிற லிப்ஸ்டிக்கும் க்ரே நிற கருவிழி இருந்தால் நியூடூ நிற லிப்ஸ்டிக்கும், சில பச்சை நிற கருவிழி உள்ளவர்கள் பிங்க் மற்றும் டெர்ரகோட்டா நிறங்களையும் தேர்வு செய்யலாம்.

Be the first to comment

Leave a Reply