சிறையிலிருந்து வெளியேறுகிறார் பிள்ளையான்; நாளை முதல் அவர் அமைச்சர்

சிறையிலிருந்து வெளியேறுகிறார் பிள்ளையான்; நாளை முதல் அவர் அமைச்சர்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அமைச்சரவைப் பதவி வழங்கப்படவுள்ளதாக அரச மட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய நாளை அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்படும் நிகழ்வுக்கும் அவர் அழைக்கப்பட்டிருப்பதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பிள்ளையான் சிறையிலிருக்கும்போதே பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால் அமைச்சுப் பதவியொன்றை வழங்குவதாக பொதுஜன முன்னணி அவருக்கு உறுதியளித்திருந்ததாக முன்பே தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply