கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் air india express IX1433 விபத்து பற்றிய விளக்கம்

கடந்த ஆகஸ்ட் 11, 2020 வெள்ளிக்கிழமை இரவு துபாயில் இருந்து பயணத்தை ஆரம்பித்த  air India express IX1344 விமானம் 184 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என சேர்த்து, மொத்தமாக 191 பேருடன் வந்த விமானம், மோசமான வானிலை, தரை இறங்க போதுமான ஓடுபாதை இல்லதாத காரணத்தினால் ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து விமானம் இரண்டு துண்டுடாக உடைந்து விபத்துக்குள்ளாகியது . இதில் பயணித்த விமானி மற்றும் துணை விமானி உட்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்துக்கான காரணம் பற்றிய ஒரு பார்வை.

கேரளா கோழிக்கோடு விமான நிலையம் என்பது table top ஓடுபாதை உடைய விமான நிலையம். அதாவது குறைந்த ஓடுபாதை(2860m) மற்றும் மலைப்பாங்கான பிரதேசம் அல்லது மேடான பிரதேசத்தில் அமைந்த ஒரு விமானதலம். இதன் இரண்டு பகுதியிலும் பள்ளங்களாக காணப்படும். சாதாரணமான நிலையிலேயே அருகில் இருப்பது தூரத்திலும் தூரத்தில் இருப்பதுபோல ஒரு மாயையை ஏற்படுத்த கூடிய அமைப்பினை கொண்டதாகும்.

2011 இல் கோழிகோடு விமான நிலையம் பாதுகாப்பு அற்றது என safety commission உறுப்பினரான captain. ரங்கநாதன்   கூறியது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக மழை நேரங்களில் தரை இறங்க முடியாதெனவும் மேலும் ஓடுபாதை அருகில் இருக்கும் buffer zone எனப்படும் மேலதிக படியான இடம் இதில் குறைவாக இருப்பதாகவும் அதாவது இறுதியாக இருக்க வேண்டிய ஓடுபாதை தாண்டி 240m  இருக்க வேண்டிய buffer zone  90m இருப்பதாகவும், ஆரம்பத்தில் இருக்க வேண்டிய 100m  buffer zone  அங்கு 75m  யில் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த air India express IX1433 இணை செலுத்திய விமானி தீபக் வசந்த் என்பர் அனுபவமுள்ள விமானி மட்டும் அல்லாது pune national defense academy, 58 course மாணவர் மற்றும் squad of honour என்ற சிறப்பான விருதினை பெற்றவர்.

விமானி. தீபக் வசந்த்

இருப்பினும் விபத்துக்கு முன் சில நொடிகளுக்கு விமானி சமிஞ்சை கட்டுப்பாடு நிலையத்துடன் தொடர்பு கொண்டு சமிஞ்சை பெற்ற போது ஓடுபாதையில் தெளிவு இன்மை காரணமாக மறுபடியும் தரை இறங்க முடியாமல் சுற்றி மறுபடியும் தரை இறங்க சமிஞை கேட்டு சமிஞ்சையும் கிடைக்கிறது.
‌கிடைக்க பட்ட சமிஞ்ஜை கொண்டு மீளவும் தரை இறக்க விமானி முயற்சிக்கின்றார்.  300km/h என்ற வேகத்தில்  பாதி ஓடுபாதையில் தரையிரங்கியது. சிறிய ஓடுபாதை உடைய விமான நிலையம் என்பதால் விமானம் தன் வேகத்தை குறைக்க ஓட வேண்டிய தூரம் குறைவாக இருந்ததும் மற்றும் buffer zone குறைவாக இருந்ததும் விபத்துக்கு ஒரு காரணமாகின்றது. அது மட்டுமல்லாமல் கேரளாவில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக தரைக்கும் விமான டயர்க்கும் இடையிலான உராய்வு குறைந்து வழுக்கி சென்று பள்ளத்தில் விழுந்து உடைந்து உள்ளது. விமானியின் தரை இறக்கத்தில் கோளாறு என்று அறிந்த உடன் விமான என்ஜினை நிறுதியதன் மூலம் விமானம் வெடிக்காமல்  பாரிய உயிர் இழப்பு குறைக்கப்பட்டது.

Be the first to comment

Leave a Reply