யுவதிக்கு பேஸ்புக்கில் ஆபா செய்தி அனுப்பிய வவுனியா இளைஞன் நடந்தது என்ன ?

யுவதிக்கு பேஸ்புக்கில் ஆபாச செய்தி அனுப்பிய வவுனியா இளைஞனை தூக்கி சென்று ஆட்களற்ற வீடொன்றில் வைத்து அடித்து துவைத்த சகோதரன் குழுவினர்!

August 11, 2020

இளம் யுதியொருவரின் பேஸ்புக்கில் ஆபாச செய்திகள் அனுப்பி வந்த இளைஞன் ஒருவர் அடையாளம் காணப்பட்டு, நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா, கோயிற்குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்தது.

வவுனியா நகர்ப்பகுதியை சேர்ந்த யுவதியொருவரின் பேஸ்புக்கில் நண்பராக இருந்த, கோயிற்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரே ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி வந்துள்ளார்.

யுவதி தன்னுடன் அரட்டையடிப்பதில்லையென்ற கோபத்தில், தொடர்ந்து ஆபாச செய்திகள் அனுப்பி வந்துள்ளார்.

இது தொடர்பாக யுவதி தனது சகோதரனிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சகோதரன் குழுவினர் அந்த இளைஞனை அடையாளம் கண்டு, அவரது வீட்டில் போய் ஏற்றிக்கொண்டு சென்று, ஆட்களற்ற வீடொன்றில் வைத்து நையப்புடைத்துள்ளனர். பின்னர் அவரை ஏற்றி வந்து, நடுவீதியில் தள்ளிவிழுத்தி விட்டு சென்றுள்ளனர்.

கோயிற்குடியிருப்பு வாலிபர் தற்போது, பேஸ்புக்கே வேண்டாம் என அதை செயலிழக்க செய்ததாக தகவல்.

Be the first to comment

Leave a Reply