தமிழர்களுக்கு பிரதமர் மகிந்த விசேட உறுதி மொழி..!

வட கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.இந்திய சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், தனது முந்தைய ஆட்சியின் போது வடபகுதியில் கடுமையான சூழ்நிலைகளின் கீழ் பெருமளவு விடயங்களை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
துரதிஸ்டவசமாக கடந்த சில வருடங்களாக குழப்பப்பட்ட இந்த அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனம் கலாசார பின்னணிகளைக் கடந்து தங்கள் அரசாங்கம் அனைத்து பிரஜைகளினதும் தேவைகளை பூர்த்தி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்வாதாரம், விவசாயத்திற்கான நீர்ப்பாசனம், ஏற்றுமதிகளை தரமுயர்த்துதல், கல்வி மற்றும் மருத்துவமனைகளின் வசதிகள் தொடர்பாக அவசர முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply