இருவர் மட்டும் வாக்களிப்பு செய்த தமிழ் வாக்களிப்பு பிரதேசம்

இலங்கையில்

இருவர் மட்டுமே

வாக்கு

பதிவுசெய்த

தமிழ் பிரதேச

வாக்களிப்பு

நிலையம்!

By-August 5, 2020 – 8:24 PM

2020 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் நடைபெற்று வந்து மாலையுடன் நிறைவுபெற்றுள்ளன.

இந்நிலையில் இலங்கையில் இருவருக்கு மட்டுமே வாக்களிக்க வாக்களிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு- மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலையிலே இவ்வாறு இருவருக்கான வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த வாக்களிப்பு நிலையத்திற்கு இன்று வாக்குப்பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டு வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து படகு மூலம் குறித்த வாக்குப்பெட்டிகளும் வாக்குச்சீட்டுகளும் இன்று காலை மாந்தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

இரண்டு வாக்காளர்களாக உள்ள தொழு நோயாளர்கள் வாக்களிப்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பொலிஸாரும் அங்கு சென்று கடமையினை பூர்த்திசெய்தமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply