ஹம்பாந்தோட்டையில் வைத்து தமிழர் பகுதிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள்..!

சர்வதேச வியாபாரத்துடன் போட்டியிடுகின்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்பப்படும். இந்த இலக்கை அடைவதற்காக சர்வதேச தொடர்பு மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ‘ நான்கு பாரிய நகர ‘ திட்டத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தையும் இணைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை நான்கு பாரிய வர்த்தக நகர திட்டத்தில் உள்வாங்கப்படும் ஏனைய மாவட்டங்களாகும்.

நான்கு பாரிய நகரங்களில் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை மையப்படுத்தி ‘ சி வடிவம் ‘ கொண்ட பொருளாதார கொரிடோவை நிர்மாணித்து சர்வதேச வியாபாரத்துடன் போட்டியிடுகின்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சினை மற்றும் காட்டு யானை அச்சுறுத்தல்களுக்கு தீர்வாக முறையான மற்றும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக லுனுகம்வெஹெர பேருந்து தரிப்பிட வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போது ஜனாதிபதி தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்குமாறு சூரியவௌ நகரின் பொதுச் சந்தைக்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Be the first to comment

Leave a Reply