திருடர்களின் கைவரிசை: யாழில் நடந்த பயங்கரம்..!

வீட்டில் இருந்தவர்களை வாளினை காட்டி அச்சுறுத்தி தாக்கிவிட்டு நகைகள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவம் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு சோளம் தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்பக்கமாக சென்ற மர்ம நபர்கள் வீட்டின் கதவினை உடைக்க முற்பட்டுள்ளனர்.இதன்போது சத்தம் கேட்டு வீட்டின் குடும்பஸ்தர் வெளியில் வந்தவரை கம்பியால் தாக்கியுள்ளனர்.

அத்துடன் வீட்டில் இருந்தவர்களை வாளினை காட்டி அச்சுறுத்திவிட்டு வீட்டில் இருந்த நகைகளை திருடி சென்றுள்ளனர்.குறித்த வீட்டில் இருந்தவர்கள் சத்தமிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடி வந்த போதும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Be the first to comment

Leave a Reply